• Jul 25 2025

இப்படி பேசுவது கேவலமா இல்லையா...? சம்யுக்தா - விஷ்ணுகாந் குறித்து பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பிய விஜய் டிவி ராஜலஷ்மி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நாட்டுப்புறப் பாடகியான ராஜலட்சுமி தன்னுடைய கணவர் செந்தில் கணேசன் உடன் தம்பதியர்களாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பிறகு சினிமா வாய்ப்புகளைப் பெற்று இருவரும் கடகடவென முன்னேறி வருகின்றனர்.

அதிலும் ராஜலட்சுமி ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்.. சொல்லு புள்ள..’ என்ற பாடலையும், புஷ்பா படத்தில் ‘சாமி.. சாமி..’ என்ற பாடலையும் பாடி புகழின் உச்சத்திற்கு சென்றார். இப்போது அவர் ‘அறம்’ பட நயன்தாராவின் கம்பீரமான லுக்கில் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் ஹீரோயின் ஆகவும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் விஜயலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டியில் சம்யுக்தாவை குறித்து பகிரங்கமாக பேசி சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

 இப்படி பேசுவதற்கு கேவலமா இல்லையா..? இருவரும் பேசி தங்களுக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயத்தை எல்லாம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கக்கூடிய சோசியல் மீடியாவில் அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்டு இருவரும் தங்களை தானே நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.

ஒருவேளை இருவரும் தங்களுக்குள் இருக்கும் பர்சனல் ஆன விஷயத்தை வெளிப்படுத்துவதால் தாங்கள் எவ்வளவு ஓப்பனாக இருக்கிறவர்கள் அல்லது உண்மையாக இருக்கிறவர்கள் என்பதை காட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் அருவருப்பாக இருக்கிறது.

இப்படி எல்லாம் வெளிப்படையாக பேசுவதால், தங்களுக்கே தெரியாமல் அவர்களை தப்பாக காட்டிவிட்டனர். அவர்கள் இருவருக்கும் இருக்கும் தனிப்பட்ட விஷயத்தை தனியாக சென்று பேசி இருக்கலாம், அப்படி இல்லை என்றால் பேசாமல் கூட விட்டிருக்கலாம்.பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற்று விலகிவிடலாம்.

அதையெல்லாம் செய்யாமல் சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் சிறுபிள்ளைத்தனமாக கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாமல் மீடியாவில் பேசி அனுதாபம் தேடிக் கொள்கின்றனர். இது ஒரு விதமான போதை தான். இந்த அளவிற்கு இருவரும் தங்களுடைய மனதை பலவீனமாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று ராஜலட்சுமி சமீபத்திய பேட்டியில் விஷ்ணுகாந்த்- சம்யுக்தா இருவரையும் வெளுத்து வாங்கி விட்டார்.என்று தான் சொல்ல வேண்டும்.


Advertisement

Advertisement