• Jul 23 2025

திடீரென கோபியின் பக்கம் மனம்மாறிய ஈஸ்வரி- அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் பாக்கியா- குழப்பத்தில் கணேஷ்-Siragadikka Aasai Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா ஜெனியைப் பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டலில் இருக்கின்றார்.அப்போது செழியனும் இருக்கின்றார். செழியனுக்கு போன் வர பாக்கியா போனை ஆப் பண்ணி வைக்குமாறு சொல்கின்றார். பின்னர் பாக்கியா ஜெனியை தங்களுடைய வீட்டிற்கு கூட்டிட்டு போய் பார்க்கிறேன் என்று சொல்ல முதலில் மறுப்புத் தெரிவித்த அவரது அம்மா பின்னர் கூட்டிட்டு போய் பாருங்க என்கின்றார்.


ஜெனி தன்னுடைய வீட்டிற்கு வரப்போவதால் செழியனும் செம சந்தோஷத்தில் இருக்கின்றார். தொடர்ந்து வீடடுக்கு வரும் பாக்கியா, ஜெனியை வீட்டுக்கு அழைத்து வரப்போவதாகச் சொல்கின்றார். அதன் பின்னர் கோபியால் தன்னுடைய கான்ராக்ட் கான்சலாகப் போன விஷயத்தைச் சொல்கின்றார். அஅதைக்கேட்ட எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

மேலும் ஈஸ்வரி நீ கோபி கூடவே இருந்திருக்கலாம். ஆம்பிள என்றால் ஆயிரம் தப்பு பண்ணுவாங்க தான் அதை நாம தான் பொறுத்துப் போகனும். கோபி கூட இவ இருந்த வரைக்கும் ஏதாவது பிரச்சினை வந்திருக்கா, நீயா போய் டைவர்ஸ் கொடுத்திட்டு இப்போ அவஸ்தைப்படுறியா என்று திட்டி விட்டு போக பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கின்றார்.


தொடர்ந்து கணேஷ் அமிர்தா இருந்த வீடடில் போய் விசாரிக்கின்றார். அப்போது அவர் அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகிப்போன விஷயத்தைச் சொல்கின்றனர்அடுத்ததாக அமிர்தாவின் நெருங்கிய தோழியும் அமிர்தாவுக்கு கல்யாணம் ஆகி விட்டதாக சொல்கின்றார். இதைக் கேட்ட கணேஷ் அதிர்ச்சியில் என்ன செய்வதென்று யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement