• Jul 23 2025

திடீரென லியோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றிய படக்குழு- எப்போது வெளியாகவுள்ளது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இதனை எகிற வைக்கும் விதமாக லியோ ட்ரெய்லரும் வெளியாகி மாஸ் காட்டியது. 

லியோ ட்ரெய்லர் முழுவதும் ஆக்‌ஷன் ட்ரீட்டாக அமைந்திருந்தது. இருந்தாலும் இதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதாக சொல்லி பல சர்ச்சைகளும் கிளம்பின. இந்நிலையில், லியோ படத்தை FDFS எனப்படும் அதிகாலை 4 மணிக்கு பார்த்துவிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். 


இதனிடையே அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு, துணிவு திரைப்படங்களுக்கு அதிகாலை FDFS அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ரோகிணி திரையரங்கம் முன்பு ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதுபோல மேலும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதனால், தமிழ்நாட்டில் இனிமேல் எந்த படங்களுக்கும் அதிகாலை FDFS காட்சிக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பின்னர் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இதே நிலைதான் . இந்நிலையில், விஜய்யின் லியோ மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணி FDFS திரையிடலுக்கு ரெடியாகிவிட்டது. 

இதனால், தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஏமாற்றத்தில் உள்ளனர். ஏற்கனவே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதும் முக்கியமாகும்.இன்னொருபக்கம் அமெரிக்கா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்திய நேரப்படி, 18ம் தேதி இரவே லியோ வெளியாகிவிடும். இதனால் தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லியோ டீம் முடிவு செய்துள்ளதாம். 


அதன்படி, ஒருநாள் முன்னதாக லியோ படத்தை ரிலீஸ் செய்துவிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ப்ரீமியர் ஷோ என்ற பெயரில் வரும் 18ம் தேதி மாலை, இரவு காட்சிகளில் லியோவை ஸ்கீரினிங் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement