• Jul 23 2025

எமோஷனலாக என்னை டச் செய்து விட்டது- டாடா படத்தை பார்த்து நெகிழ்ந்த பிரபல மாஸ் நடிகர் - என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கவினின் டாடா படத்தை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸும் பாராட்டியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் கவின். இதனையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மூன்றாவது சீசனில் போட்டியாளராக நுழைந்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் கூடியது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின் கவின் நடிப்பில் 'லிப்ட்' என்ற படம் வெளியானது. 


ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான இந்தப்பட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஆகாச வாணி என்ற வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்தார். இதனிடையில் கவின் நடிப்பில் கடந்த வாரம் 'டாடா' என்ற படம் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் கணேஷ் பாபு இயக்கியுள்ள இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் கவினுடன் அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'டாடா' படம் வெளியானதில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.'டாடா' படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 


குடும்பத்துடன் பார்க்க பீல் குட் டிராமா என பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் 'டாடா' குறித்து ராகவா லாரன்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘டாடா’ படத்தை பார்த்தேன்,


 எமோஷனலாக என்னை இந்த படம் டச் செய்துவிட்டது, இது ஒரு பக்காவான குடும்ப செண்டிமெண்ட் படம், அனைவரும் தியேட்டரில் பாருங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு கவின் மற்றும் அபர்ணாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளார். ராகவா லாரன்ஸின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement