• Sep 08 2025

'என் இசை மீதான உங்கள் பேரன்பு தான் இதை சாத்தியமாகியது' சந்தோஷத்தில் இசையமைப்பாளர் அனிரூத்

stella / 3 years ago

Advertisement

Listen News!

புகழ் பெற்ற இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான இசையமைப்பாளர் அனிரூத் நடிகர் தனுஷ் நடித்த 3 படம் மூலமாக வை திஸ் கொலவெறி பாடல் மூலமாக அறியப்பட்டார். தனுஷ் நடித்த திரைப்படங்களுக்கே இசையமைத்து வந்த நம்ம அனிரூத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கெல்லாம் இசையமைத்து இன்று முன்னணி இசையமைப்பாளராக சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

சிறந்த இசையமைப்பாளருக்குமான பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் தொடங்கி அனிரூத் இசையமைப்பில் 4 படங்கள் வெளியாகியுள்ளன. இவையனைத்துமே முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இடம்பெற்ற படங்கள் பீஸ்ட், காத்து வாக்குல 2 காதல், டான்,ஆகியனவும், தற்போது விக்ரம் திரைப்படமும் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் அனிரூத் தற்போது தனது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏப்ரல் 13 தொடங்கி 3 வரை, என்னிடம் 4 படங்களில் ரீலீஸ் காத்திருந்தது."பீஸ்ட்டில் தொடங்கி காத்து வாக்குல 2 காதல், டான் மற்றும் விக்ரம் வரை என் இசை மீதான உங்கள் பேரன்புதான் இதை சாத்தியமாக்கியது.

எங்கள் குழுவின் இசைக்கலைஞர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது.எங்களை போலவே விக்ரம் திரைப்படத்தை நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகின்றோம்" என கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement