• Jul 24 2025

என்னைப் போன்றவர்களுக்கு இது கட்டாயம் தேவை- தொகுப்பாளினி டிடி வைத்த முக்கிய கோரிக்கை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 21 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்த வருபவர் தான் தான் டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி.இவர் தற்பொழுது சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மாத்திரம் அல்லாது முக்கிய பிரபலங்களை இன்டர்வியூ எடுத்தும் வருகின்றார்.

இவர் 2014 -ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமணம் அதிக நாட்கள் நிலைத்து நிற்கவில்லை, இவர்கள் இருவரும் 2017 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.சமீபத்தில் டிடி, தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவை அமர்ந்து தான் தொகுத்து வழங்கினார்.


இந்நிலையில் இது குறித்து பேசிய டிடி, " இந்த பதிவு என்னை போல மணிக்கணக்கில் நின்றபடி பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு தான். நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி இருக்கை அமைத்து தரவேண்டும்".


"அந்த இருக்கை பார்வையாளர்களுக்கு நாங்கள் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை நடத்துவது போல தெரியவேண்டும். பல மணிநேரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் எங்களுக்கு உதவியாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கோரிக்கை தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement