• Jul 25 2025

17 வருஷம் ஆச்சு விரைவில் நானே சொல்கின்றேன்- திருமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகை தமன்னா- சூப்பர் தில்லு தான்

stella / 2 years ago

Advertisement

Listen News!

 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை தமன்னா.இப்படத்தைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் மாறி மாறி பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

17 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கும் இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக ஆக்‌ஷன் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்பொழுது மலையாளத்தில்  ‘பந்த்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.


தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்ப தாகவும், தொழில் அதிபரை மணக்கப்போகிறார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது.

இதற்கு பேட்டியில் பதில் அளித்த நடிகை தமன்னா, “நான் சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட் டன. இத்தனை வருடம் சினிமாவில் நீடிப்பேன் என்று நினைக்கவில்லை. பெண்களுக்கு திருமண வயது வந்தவுடன் எல்லோரும் திருமணத்தைப் பற்றி கேட்பார்கள்.


நான் இன்னும் திருமணம் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. என் திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம்.எந்த முடிவும் எடுக்கவில்லை நேரம் வரும்போது திருமணம் குறித்து நானே சொல்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement