• Jul 25 2025

திருமணத்தை ரகசியமா வைக்க மாட்டேன்...ரசிகர்களுக்கு சூப்பர் தகவலை பகிர்ந்த அஞ்சலி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெற்றி படங்களை தந்த அஞ்சலி தற்போது தனது திருமணத்தை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இயக்குநர் ராமால், 'கற்றது தமிழ்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அந்த வகையில் இவர் நடித்த, அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

"நான் இயக்குநர் ராம் சாரின் மாணவி என்று நான் பெருமையாக சொல்வேன்.அவருடன் ஒவ்வொரு படம் பண்ணும் போது அவரிடம் இருந்து நிறைய விஷயம் கற்று கொள்கிறேன்.

புதிதாக சினிமாவுக்கு வருபவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் கொஞ்சம் வீக்காக இருந்தால் கூட சினிமாவில் தாக்கு புடிக்க முடியாது" என்று  தெரிவித்தார் அஞ்சலி.

"காதல் என்பது ஒரு அழகான உணர்வு அதை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். என்னது திருமணத்தை பற்றி வீட்டில் கேட்பாங்க, ஆனால் என் திரைத்துறை வாழக்கையை புரிந்து கொண்டு எனக்கு அழுத்தம் தரமாட்டார்கள்.அத்தோடு முன்பெல்லாம் திருமணம் முடிந்தால் நடிகைகள் நடிக்க வரமாட்டார்கள், தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

இப்போதைக்கு என் திருமணத்தை பற்றி நான் யோசிக்கவில்லை, ஆனால் நிச்சியம் பண்ணுவேன், திருமணத்தை ரகசியமா வைக்க மாட்டேன் எல்லோருக்கும் சொல்வேன்" என்று பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளார்.

Advertisement

Advertisement