• Jul 24 2025

ஏகே 62 அறிவிப்பு வெளியாகி ஒரு வருஷம் ஆகுது- கைவிட்டு போன அஜித் பட வாய்ப்பு- கடும் சோகத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி லைகா நிறுவனம் அஜித்தின் எகே 62 படத்தை இயக்கப் போவது விக்னேஷ் சிவன் தான் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இந்நிலையில், ஒரு வருஷம் ஆகியும் இன்னமும் படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதியாகவில்லை. விக்னேஷ் சிவன் இனி ஏகே 62 படத்தை இயக்கப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனது குறிப்பிடத்தக்கது.


ஏகே 62 படத்தை தான் இனி இயக்கப் போவதில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக தனது  டுவிட்டர் பக்கத்தில் இருந்து அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன் பயோவில் இருந்தும் ஏகே 62வை நீக்கி அந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்நிலையில், ஒரு வருடம் ஆன நிலையில், கெடச்சத இழக்குறதும்.. இழந்தது கெடைக்கிறதும் என்கிற நானும் ரவுடி தான் பாடல் வரிகளை இன்ஸ்டா பக்கத்தில் போட்டு சில வரிகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


விக்னேஷ் சிவனின் போஸ்ட் ரசிகர்களை ஒரு பக்கம் ஃபீல் செய்ய வைத்தாலும், அஜித் ரசிகர்கள் நாங்க அவரை விட பாவம்ங்க எங்களுக்கு இன்னும் அஜித் படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போறாரா என்பதே உறுதியாக தெரியவில்லை என அந்த அப்டேட்டையாவது சொல்லுங்க என லைகாவிடம் அப்டேட் கேட்டு வருகின்றனர்.


ஏகே 62 படத்தின் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கால்பந்தாட்ட பயிற்சிகளுக்கு சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். விரைவில் ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியானால் அஜித் ரசிகர்கள் வேறலெவலில் சோஷியல் மீடியாவையே தெறிக்கவிட காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement