• Jul 25 2025

இது கோழியா? இல்லை காக்காவா? - பிரபல சிக்கன் நிறுவனத்தை கேலி பண்ணிய வனிதா விஜயகுமார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

வித விதமாக வனிதா விஜயகுமாரும் அவரது மகளுமே யூடியூப் சேனலுக்காக சமைத்து வீடியோக்களை போட்டு வருகின்றனர். அவர்கள் வெளியிடும் வீடியோக்களில் உள்ள ஐட்டங்கள் எல்லாமே ரொம்பவே பெரிதாக தெரியும். இந்நிலையில், வீக்கெண்ட் அதுவுமா கேஎஃப்சி சிக்கனை வாங்கி சாப்பிடலாமே என ஆசைப்பட்ட வனிதா விஜயகுமாருக்கு ரொம்பவே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.


கேஎஃப்சி சிக்கனை ஆர்டர் செய்த வனிதா விஜயகுமார் ஆசை ஆசையாக டப்பாவை திறந்து பார்த்தால் என்னடா இது கோழியை வெட்டி பொறித்தார்களா? இல்லை கோழிக் குஞ்சாக இருக்கும் போதே பொறித்து விட்டார்களா என்கிற டவுட்டு எழுந்துள்ளது. உடனடியாக அந்த ஃபிரைட் சிக்கன்களை வரிசையாக எடுத்து போட்டோ எடுத்து அப்படியே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிரடியான போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் வனிதா விஜயகுமார்.


காக்கா பிரியாணி தின்னா காக்கா குரல் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என்கிற விவேக் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இவ்வளவு சின்னதா உலகத்துல எங்கேயும் சிக்கன் இருக்காது என்றும் இது என்ன கோழியா அல்லது காக்காவா என கேட்டு கேஎஃப்சி நிறுவனத்தை வச்சு விளாசி உள்ளார் வனிதா விஜயகுமார்.


வனிதா விஜயகுமார் போட்ட பதிவை பார்த்ததும் அவரது ரசிகர்கள் ஆமா அக்கா அப்படித்தான் ஏமாத்துறாங்க, நானும் இதை ரொம்ப வருஷமா ஃபீல் பண்ணியிருக்கேன். ஆனால், நீங்க தான் போல்டா சொல்லியிருக்கீங்க என வனிதா விஜயகுமாருக்கு ஆதரவு தெரிவித்து கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement