• Jul 25 2025

கிளியை வளர்த்து பட்ட கஷ்டம் இருக்கே- முதன் முறையாக ஓபனாக பேசிய ரோபோ ஷங்கர்- இவ்ளோ Fun-னா அதை சொல்லி சிரிக்க வெச்சுட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது வீடு சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இவர் அண்மையில் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த போது சட்டவிரோதமாக கிளிகளை வளர்த்து வருவதாக அறிந்த வனத்துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு அந்த கிளிகளை பறிமுதல் செய்தனர். 

அந்த சமயத்தில் ரோபோ சங்கரும், அவரது குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருந்ததால், அவர்கள் இந்தியா திரும்பியதும் விசாரணை நடத்தப்பட்டதோட 5 லட்சம் குற்றப் பணமும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் இது காசுக்கு வாங்கிய கிளி இல்லை பரிசாக வந்த கிளி என்றும் அவரது மனைவி ப்ரியங்கா அண்மையில் தெரிவித்திருந்தார்.


இப்படியான நிலையில் நடிகர் ரோபோ ஷங்கரும் முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அதில் எங்களுக்கு பச்சையாக இருந்தால் கிளி என்று தான் தெரியுமே தவிர அது என்ன இனம் கிளி என்று தெரியாது. அது எங்களுக்கு கிப்பாக வந்திச்சு. வீட்டி நாய்களைச் செல்லமாக வளர்ப்பது போல தான் கிளிகளையும் வளர்த்தோம்.


நாங்க வெளிநாட்டுக்கு போனதும் வந்து எடுத்திட்டு போய்ட்டாங்க. அப்பிறம் 5 லட்சம் ரூபா காசு கட்டணும் என்று சொன்னாங்க எனக்கு எதுவும் புரியல. செல்லப்பிராணியை வளர்த்தது தாப்பா என்றும் காமெடியாக கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement