• Jul 24 2025

இது எனக்கு பெருமை- அட்லி ப்ரியா தம்பதியினருக்கு ஸ்பெஷல் வாழ்த்துத் தெரிவித்த ஷாருக்கான்- குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் அட்லி. இவர் ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இதனை அடுத்து தற்பொழுது பாலிவூட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்த வருகின்றார்.அந்த படத்தின் ஷூட்டிங் மும்பை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது.

மேலும் அட்லி தான் விரைவில் அப்பா ஆக இருப்பதாக அறிவித்தார். மனைவி ப்ரியா தற்போது கர்ப்பமாக இருக்கும் போட்டோவையும் அவர் வெளியிட்டு இருந்தார்.


இந்நிலையில் ஷாருக் தற்போது  டுவிட்டரில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அட்லி படத்தில் நடிப்பது பற்றி கேட்டதற்கு "Amazing" என கூறி இருக்கிறார். மேலும் அட்லி பிரியா ஜோடி குழந்தை பெற இருப்பதற்கும் அவர் வாழ்த்து கூறி உள்ளார்.


ரஜினிகாந்த் உடன் நடிப்பீர்களா என ஒரு ரசிகர் கேட்டதற்கு இது எனக்கு பெருமை" என பதில் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement