• Jul 24 2025

குரைக்கிற நாய் குரைக்கட்டும்- ப்ளூ சட்டை மாறனால் சூடாகிய நடிகர் அசோக் செல்வன்- ஓ இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

மற்ற இளம் நடிகர்களை போல மாஸ் ரூட்டில் எல்லாம் பயணிக்காமல் தனக்கு பிடித்த நல்ல கதைகளை தேர்வு செய்து வித்தியாசமாக நடித்து வரும் நடிகர் தான் அசோக் செல்வன். இவர் நடிப்பில் வெளியாகிய தெகிடி, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வெற்றியைத் தேடித் தந்தது.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம் மற்றும் நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட  படங்கள் ஃபிளாப் என ப்ளூ சட்டை மாறன் டுவிட் போட்டிருந்தார். மேலும், சசிகுமார் நடித்த 3 படங்கள் மற்றும் அதர்வா நடித்த 3 படங்களும் இந்த ஆண்டு தோல்வியை அடைந்ததாக ட்வீட் போட்டிருந்தார்.


சசிகுமார் மற்றும் அதர்வா ப்ளூ சட்டை மாறனின் இந்த டுவிட்டை கண்டு கொள்ளவில்லை. ஆனால், நடிகர் அசோக் செல்வன் சட்டென சூடாகி விட்டார் போல.. ப்ளூ சட்டை மாறனை குறிப்பிடாமல், "குரைக்கிற நாய் குரைக்கட்டும்.. அதை இக்னோர் செய்து விட்டு நாம் நம் வளர்ச்சியை நோக்கி பயணிப்போம்" என அசோக் செல்வன் பதிலடி கொடுத்திருந்தார்.

வருஷத்துக்கு 5 படம் ஃபிளாப் என்பது சரியான வளர்ச்சி இல்லை. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. டுவிட் மூலம் குரைப்பது நல்லது கிடையாது குழந்தை.. என்ஜாய் தி பிஸ்கட் என காரசாரமாக ப்ளூ சட்டை மாறன் தனது பதிலடியை கொடுத்துள்ளார்.


ப்ளூ சட்டை மாறனுக்கும் அசோக் செல்வனுக்கும் இடையே வெடித்துள்ள இந்த திடீர் மோதல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அசோக் செல்வன் நடித்த படங்கள் எல்லாம் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் என அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர், ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் சரியான ஒன்று தான் நல்ல படங்களை தேர்வு செய்து அடுத்த ஆண்டு வெற்றி நாயகனாக மாறுங்கள் என சில ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement