• Jul 24 2025

அரசியல் ஆசை இருந்தா மட்டும் போதாது..விஜய்யின் லியோ பாடலை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு படகுழுவினர் லியோ படத்தின் முதல் பாடலை வெளியிட்டு இருந்தனர். அனிருத் இசையில் விஜய்யின் குரலில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி   அந்த பாடலில் போஸ்டர் அடி, அண்ணா ரெடி என்ற வார்த்தைகள் மூலம் விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

இதை பார்த்தவுடன் சும்மா விடுவாரா ப்ளூ சட்டை மாறன், போஸ்டர் அடி, அண்ணன் ரெடி என்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதே, பொது இடங்களில் போஸ்டர் ஒட்டி அசுத்தப்படுத்துவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் என கூறியுள்ளது.

ஆகையால் முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது. சிகரெட் புடிக்கற போஸ்டரை ரிலீஸ் பண்ணுறதும், போஸ்டர் அடிக்க சொல்லி பாடுறதும் எந்த வகையான சமூக அக்கறை என விஜய்யை கேள்வி கேட்டுள்ளார். அதாவது அரசர் எவ்வழியோ மக்களும் அவ்வழி தான் செல்வார்கள். தலைவன் சரியாக இருந்தால் தான் நாட்டு மக்களும் நன்றாக செயல்படுவார்கள்.

இப்போது அரசியல் ஆசை இருக்கும் விஜய் தனது படத்தில் சமூக அக்கறை கொண்ட விஷயங்களை சொல்லாமல் சிகரெட் பிடிப்பது, போஸ்டர் அடிப்பது என தவறான பழக்கவழக்கங்களை கற்றுத் தருவதாக ப்ளூ சட்டை மாறன் விலாசி உள்ளார். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement