• Jul 24 2025

கோபம் வராது என்று இல்லை இவங்க கிட்ட மட்டும் தான் கோபம் வரும்- த்ரிஷா பகிர்ந்த சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நடிகர் தான் த்ரிஷா. இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதில் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.இதனால் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை, கொச்சின், கோயம்பத்தூர், டெல்லி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று பம்பரமாய் சுழன்று படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்து வருகிறார்கள்.இந்த ப்ரமோஷன் பணிகளில் த்ரிஷாவும் ஈடுபட்டு வருகின்றார்.


ப்ரமோஷனில் த்ரிஷா கூறும் விடயமும் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் த்ரிஷா பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளித்திருந்தார். அதில் எனக்கு கோபம் வராது என்று யார் சொன்னது. கோபம் வரும் ஆனால் எல்லார் கிட்டையும் வராது எனக்கு ரொம்ப குளோஸ் ஆன எனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கிடையில் தான் கோபம் வரும் என்று கூறியுள்ளார்.


மேலும் த்ரிஷா விஜய்யுடன் 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்து லியோ படத்தில் நடிப்பதால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement