• Jul 25 2025

"அஜித் ரசிகர்களே"... அவசர வேண்டுகோள் விடுத்த தயாரிப்பாளர் பொன்னுரங்கம்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமாரை நாயகனாக திரையில் அறிமுகப்படுத்தியது 'அமராவதி' என்ற திரைப்படம் தான். இந்த படத்தை 'சோழா கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி தற்போது 30 வருடங்கள் ஆகிவிட்டது.


அதை நினைவு கூர்ந்து கோலாகலமாக கொண்டாடும் வகையில் வரும் 2023 மே 1- ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் 'அமராவதி' திரைப்படத்தை மீளவும் வெளியிடுகிறது ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனம்.  அதாவது நவீன தொழில்நுட்ப முறையில் மாற்றம் செய்யப்பட்டு, ஒளி மற்றும் ஒலி ஆகியவை உயர் தொழில்நுட்ப வடிவில், புதிய பரிணாமத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இப்படம் திரையிடப்படுகிறது.


அந்தவகையில் தென்னிந்தியா முழுவதும் 400 திரையரங்குகளில் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிட ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனர் சோழா பொன்னுரங்கம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் அஜித்குமாரின் கோடான கோடி ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், தீவிர ஏற்பாடுகளையும் அவர் செய்து வருகிறார்.


எனவே இப்படம் ரீ ரிலீஸாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்ற நிலையில் தற்போது அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் பொன்னுரங்கம். அதாவது "அஜித்குமாரின் அன்பு ரசிகர்களும், திரை உலக கலைஞர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இந்த ‘அமராவதி’ திரைப்படத்தின் மறு வெளியிட்டிற்கு ஒத்துழைக்க வேண்டுமென" அவர் அந்த வேண்டுகோளின் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement