• Jul 24 2025

ஒரு நடிகை தனது வேனில் இருந்து வர நேரம் எடுப்பது நியாயமானது தான்- பேட்ட பட நடிகர் கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருபவர் தான் நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியாகியிருந்த பேட்ட திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது ஹாடி என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோவின் ராதிகா நந்தா மற்றும் சஞ்சய் சாஹா ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படம், மேற்கு உத்தரபிரதேசத்தைச் சுற்றியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.


இப்படத்தில் தான் பெண் வேடம் அணிந்து நடித்தது குறித்து பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது தனது மகள் முதல் முறையாக தன்னை பெண் உடையில் பார்த்து வருத்தப்பட்டதாகவும், இறுதியில் அது ஒரு படத்திற்காக என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார் 

மேலும் ஹாடி படப்பிடிப்பின் அனுபவத்திற்குப் பிறகு, நடிகைகள் மீதான மரியாதை பல மடங்கு அதிகரித்ததாகவும் நவாசுதீன் கூறினார். “ஒரு நடிகை தனது வேனில் இருந்து வெளியே வருவதற்கு ஏன் ஆண் நடிகரை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்று இப்போது எனக்கு புரிகிறது. இது முற்றிலும் நியாயமானது" என்ற அவர், வெறும் நடிப்பு மட்டுமின்றி, முடி, ஒப்பனை, உடைகள், நகங்கள் உள்ளிட்ட பலவற்றை பெண்கள் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார் நவாசுதீன் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement