• Jul 23 2025

எங்க அம்மா தான் காரணம்- திருமணத்தில் நடனமாடும் நடிகர்களை திட்டித் தீர்த்த கங்கனா ரணாவத்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் கங்கனா ரணாவத்.தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் .அத்தோடு இவர் ஹிந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


அந்த வகையில் சமீபத்தில் கங்கனா அவர்கள் தன்னுடைய தாய் விவசாய நிலத்தில் வேலை செய்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் மீடியாவில் கங்கனாவின் தாயார் விவசாய நிலத்தில் வேலை செய்ததை குறித்து பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள். 


இந்நிலையில் இதற்கு நடிகை கங்கனா அவர்கள் பதில் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருந்தது, என்னுடைய வருமானத்தினால் என்னுடைய தாய் பணக்காரராகவில்லை.அத்தோடு என்னுடைய குடும்பத்தில் அரசியல் தலைவர்கள், உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள். இருந்தாலும், என்னுடைய அம்மா 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக பணியாற்றி 25 சினிமா மாபியா மீது நான் இந்த அளவிற்கு ரியாக்ட் ஆகுவதற்கு காரணம் என்னுடைய அம்மா தான். அதனால் தான் சில நடிகர்களைப் போல நான் திருமணங்களில் என்னுடைய தரத்தை குறைத்து கொண்டு நடனமாட விரும்புவதில்லை என்று கூறியிருந்தார்.


இப்படி இவர் கூறியிருந்ததற்கு காரணம், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இந்திய நடிகர்களான சல்மான்கான், அக்ஷய்குமார் இணைந்து மேடையில் நடனமாடி இருந்தார்கள். இது இணைந்து வீடியோ கூட சோசியல் மீடியாவில் படு வைரலாகி இருந்தது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் கங்கனா பாலிவுட் நடிகர்களை விமர்சித்து கூறியிருந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு கங்கனா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


Advertisement

Advertisement