• Jul 25 2025

இது முற்றிலும் தவறு.. மற்றவர்களுக்கு மெசேஜ் கொடுக்க நான் வரல.. ஷாருக்கானின் பகீர் பேட்டி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் கிங் கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான் . இவர் சினிமா துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்லாது கோடிக்கணக்கான ரசிகர்களின் நாடி துடிப்பாய் இருந்து இயங்கி வருகிறார். சினிமாவில் ஒரு சிறிய பிரேக் எடுத்து கொண்ட ஷாருக்கான் சமீபத்தில்  வெளியான பதான் திரைப்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.


இந்நிலையில் அவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் "நீங்கள் இதுவரையில் நடித்த கதாபாத்திரங்களில் ஏதாவது மோசமான அல்லது வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தது குறித்து என்றாவது ஒரு நாள் வருத்தப்பட்டு உள்ளீர்களா? இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான உதாரணமாக என்றாவது தோன்றியுள்ளதா? என கேள்வி கேட்கப்பட்டது. 


அதற்கு பதிலளித்த ஷாருக்கான் "இந்த கேள்வியை நான் முற்றிலும் தவறு என்று சொல்வேன். நான் சினிமா மூலம் மற்றவர்களுக்கு மெசேஜ் கொடுக்க வரவில்லை. அது தபால் சர்வீஸ் செய்பவர்கள் வேலை. நான் இங்கு உங்களை என்டர்டெயின் செய்வதற்காக இருக்கிறேன். இதை நீ செய்ய வேண்டும் இதை நீ செய்யக்கூடாது என நான் சொல்ல போவதில்லை. ஏன் என்றால் நானே மிகவும் நல்ல மனிதன் கிடையாது. நான் அடுத்தவர்களை ஜட்ஜ் செய்ய முடியாது" எனக் கூறியுள்ளார்.


மேலும் "உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் எப்படி கடந்து போக வேண்டும் என நான் சொல்ல கூடாது. என்னிடம் யாராவது நீ இப்படி தான் உன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என அறிவுரை கூறினால் நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எண்டர்டெயின்மெண்ட் என்றால் நீங்கள் சென்று படத்தை அனுபவித்து ரசிக்க வேண்டும். உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மனிதர் ஏற்கனவே சொன்னதை போல திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. மெசேஜ்களை போஸ்டல் சர்வீஸ் தான் செய்ய வேண்டும்" எனவும் மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார் ஷாருக்கான். 

Advertisement

Advertisement