• Jul 25 2025

அண்ணனுக்கும் எனக்கும் பிரச்சினை பேசாமல் இருந்தோம் -கலங்கிய மயில்சாமியின் உடன் பிறந்த தம்பி

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் மயில்சாமி தம்பி சக்திவேல் ஒரு பேட்டியில் தன்னுடைய மறைந்த அண்ணனை பற்றி பேசியிருந்தார். அவர் கூறுகையில் “அம்மா பெயர் மாரக்கால், அப்பா பெயர் “அம்மா அப்பா எக்ஸ் மிலிட்டரி மேன் இரண்டாம் உலகப்போரில் கலந்து கொண்டிருக்கிறார். மொத்தம் எங்களுடைய குடும்பத்தில் 10 பேர் அதில் 3 பேர் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். 

சுப்பிரமணி, முருகேஷ், தண்டபாணி, சண்முகம், வேலுசாமி, மயில்சாமி, சக்திவேல். எங்களுடைய பூர்வீகம் சத்தியமங்கலம் ஆனால் நாங்கள் பிறந்தது கோவையில் குப்புசாமி மருத்துவமனையில். மயில்சாமி 4வரையில் தான் படித்தார். சென்னை வரும் போது அவருக்கு 13 முதல் 14 இருக்கும். அப்போதே சினிமாமீது கொண்ட மோகத்தின் காரணமாக பணம் கொடுக்காமல் சினிமா பார்க்க திரையரங்கில் முறுக்கு விற்க செல்வார். அப்பாவுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் 79ம்,மற்றும் 80 காலங்களில் மயில்சாமி பிடிவாதமாக இருப்பதால் நாங்களே சினிமாவிற்கு அனுப்பி வைத்தோம். 


பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு நாங்கள் சென்னை வரும் போது மயில்சாமி கணேஷ்பவான் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்களுடைய அப்பா வேண்டாம் வந்துவிடு என கூறினாலும், வாரமாட்டேன் என அப்போதே பிடிவாதமாக இருந்தார். என்னுடைய அண்ணனை பற்றி கேட்கும் போது பெருமையாக இருக்கிறது. எம்.ஜி.ஆரின் பாடலுக்கு தகுந்தார்போல் வாழ்ந்துவிட்டு சென்று விட்டார்.

இதனைடையே எனக்கும் என்னுடைய அண்ணனுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு சிறிய பிரச்னை நடந்தது. அந்த பிரச்சனையால் இருவரும் பேசாமல் சில காலம் பேசாமல் இருந்தோம். அதற்கு சில இடையில் கூட சில முறை போன் செய்து பேசியிருக்கிறோம். ஆனால் இப்படி நடிக்கும் என எதிர்பார்க்கவில்லை என வருந்தினார்.


 மயில் சாமி கோவை வந்தால் அவருக்கு அனைத்தும் செய்து கொடுப்பது நான் தான் பல படப்பிடிப்புகளில் நான் இருந்திருக்கிறேன்.. பாக்யராஜ், சத்யராஜ் போன்றவர்களை எனக்கு தெரியும்.  மயில்சாமியின் இறப்பிற்கு கூட எங்களுக்கு பாக்யராஜ் அவர்கள் அண்ணன் மயில்சாமி சிவனிடம் சென்றுவிட்டார் என ஆறுதல் கூறினார். 


மயில்சாமியின் மூத்த மகன் உண்மையான பெயர் அருமை நாயகன் தற்போது படத்திற்காக அன்பு என மாற்றியுள்ளனர். சிறியவர் பெயர் நாங்கள் வீட்டில் குட்டு என்று அழைப்போம் பெயர் யுவன். மயில்சாமியின் மூத்த மகனுக்கு சபாநாயகர் பிச்சாண்டி தான் பெண் கொடுத்தார். ஆனால் அந்த திருமணத்திற்கு சில காரணங்களினால் யாரையும் அழைக்கவில்லை. என்னை பொறுத்தவரையில் என்னுடைய அண்ணன் மயில்சாமி மறையவில்லை வெளியில் படப்பிடிப்பு சென்றிருக்கிறார் என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement