• Jul 24 2025

உன்னோட இருக்கிறது ரொம்பவே கஷ்டம் டா யப்பா- மனைவியை விமர்சித்த அசீமை வறுத்தெடுத்த காஜல் பசுபதி

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது பாதி கட்டத்தை தாண்டி இருக்கிறது. 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில்  பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்த அசீம் என்பவரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகின்றார்.இவருடைய ஆட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்து நெக்கட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் தனது கேஃமை சரியாக விளையாடி வருகின்றார்.


இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.இது குறித்து தனது ஹவுஸ்மேட்சிடம் பேசினார் அதில் ‘ ‘ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் இப்படி (மாடர்ன்) ட்ரெஸ் பண்ணலாமா, ஆனால், அவள் அப்படி தான் ட்ரெஸ் அணிவால். ஒரு நிகழ்ச்சிக்கு போனால் நான் ஏன் ஸ்கர்ட் போட்டு வரக்கூடாது என்று கேட்பாள்’இதை கேட்கப்போய் தான் எங்களுக்குள் முதல் சண்டை வந்தது. முதல் வாக்குவாதமே ட்ரெஸ்காக தான் வந்தது’ என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.


அதில் ‘விக்ரமன்கேள்வி கேட்டாலே காண்டாகுறான்.தன் மனைவியின் Dress code பிடிக்கலைனு சன்டை போட்டு Divorce வாங்கிய அசீம்.ரொம்பவே கஷ்டம் டா யப்பா தட் மூணு பேரு மைண்ட் வாய்ஸ்‘ என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவை முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement

Advertisement