• Jul 25 2025

புதிய தொழிலை ஆரம்பித்த சீரியல் நடிகை வைஷாலி - வைரலாகும் புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் முத்தழகு, என்ற சீரியல் ஒருவர் இரு மனைவிகளுடன் வாழும் இந்த கதையில் அடுத்தடுத்து திருப்பங்கள், பரபரப்புடன் ஓடுகிறது.


இந்த சீரியலில் கியூட்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை வைஷாலி. இப்படிபட்ட வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


இந்நிலையில் நடிகை வைஷாலி கடந்த வருடம் தான் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த சத்யா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். 


மேலும் திருமணத்திற்கு முன்பே சத்யா ஒரு திருமண மண்டபத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நேரத்தில் தான் வைஷாலி மற்றும் சத்யா இருவரும் இணைந்து ஒரு பிட்னஸ் ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.


அப்போது எடுக்கப்பட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement