• Jul 25 2025

இணையத்தில் கசிந்த ஜவான் பட காட்சி!- பரபரப்பில் படக்குழு- கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அட்லி பிகில் திரைப்படத்தினைத் தொடர்ந்து ஷாருகான் இயக்கத்தில் ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகின்றார். பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அட்லி. இந்தப் படத்தில் ஷாருக்கனுடன் நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் விஜய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் கேமியோ அப்பியரன்ஸ் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் இப்படத்தில் அல்லு அர்ஜுனை கேமியோ அப்பியரன்ஸில் நடிக்க இயக்குநர் அட்லி அனுகியதாகவும், ஆனால் அல்லு அர்ஜுன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியானது. 


இதையடுத்து ராம் சரண், ஜவான் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.இந்நிலையில் ஜவான் படத்தின் 5 செகண்ட் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. லீக்கான வேகத்தில் அந்த காட்சி பலராலும் பகிரப்பட்டு வைரலானது. இதையடுத்து அந்தக் காட்சிகளை படக்குழுவினர் உடனடியாக நீக்கிவிட்டனர். 


இருப்பினும் அந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ஜவான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் தான், 5 நொடி காட்சியே பெரிய ஹைப்பை ஏற்படுத்தி விட்டதாக கூறி வருகின்றனர்.மேலும் லீக்கான காட்சியே இப்படி இருந்தால் ட்ரெயிலரும் டீசரும் எப்படி இருக்குமோ என்றும் நெட்டிசன்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜவான் காட்சி லீக்கானதில் இருந்து #Jawan என்ற ஹேஷ்டேக்கையும் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement