• Jul 26 2025

‘ஜெய் பீம்’ ஹீரோயின் புது பட போஸ்டரை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜெய் பீம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் பல பாராட்டுகளையும் பெற்றார் நாடிகை லிஜோமோல் ஜோஸ். தற்போது, காதலர் தினத்தன்று இவரது புதிய படத்தின் தைரியமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரது கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

இதற்கு முன்பு, லென்ஸ் மற்றும் தலைக்கூத்தல் ஆகிய படங்களைத் தயாரித்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்துக்கு ‘காதல் என்பது பொதூவுடைமை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் மற்றும் அனுஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தற்போது, வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்க்கும்போது, இது ஒரு லெஸ்பியன் காதல் கதையாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. 

மேலும், இது ஒரு LGBTQ சமூகம் பற்றி பேசுக்கூடிய படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

மேலும், இந்த படத்தில் ரோகினி, வினீத், அனுஷா, தீபா, காலேஷ் மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை சிமெட்ரி சினிமாஸ், க்ளோவிங் டங்ஸ்டன் மற்றும் நித்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement