• Jul 25 2025

ஆஸ்கர் விருதுக்காக அமெரிக்கா செல்லும் ஜூனியர் என்டிஆர்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்த “நாட்டு‘நாட்டு” என்ற பாடல், சிறந்த பாடல் பிரிவின் கீழ், ஆஸ்கார் விருது பந்தயத்தில் இணைந்துள்ளது. 

வருகின்ற மார்ச் 12, ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் பாடகர்கள் ராகுல் சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா ‘நாட்டு நாட்டு’ பாடலை நேரலையாக பாட உள்ளனர்.

இந்நிலையில், ‘RRR’ படக்குழு மொத்தமும் தற்போது அமெரிக்காவில் இருக்கும் போது, அங்கு நடைபெறும் நேர்காணல்கள் மற்றும் விருது வழங்கும் விழாக்களில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் பொழுது, ஜூனியர் என்டிஆர் தனது உறவினரை இழந்த வருத்தத்தில் இருந்ததால் முன்னதாக அமெரிக்கா செல்ல முடியவில்லை.

அதாவது, அவரது உறவினர் சகோதரர் தாரக ரத்னா பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் காலமானார், இதனால் அவர் தனது குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயமாயிற்று, தற்பொழுது 2023 ஆஸ்கார் விருதுகளுக்காக அமெரிக்காவிற்கு செல்லும் ஜூனியர் என்டிஆர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement