• Jul 24 2025

பிரமாண்டமாக நடந்த 'மீனா 40' விழா.. அரங்கமே அதிரும்படி திரண்டு வந்த திரைப்பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தொடர்ந்து ராஜ்கிரன் நடிப்பில் வெளியாகியிருந்த 'என் ராசாவின் மனசிலே' என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினவர் நடிகை மீனா. இதனை அடுத்து ரஜினி, கமல்ஹாசன், அஜித், பார்த்திபன், சத்யராஜ், சரத்குமார் என பல் முன்னணி ஹீரோக்களுனும் இணைந்து நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் மீனா திரையில் நடிக்கத் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் 'மீனா 40' என்ற நிகழ்ச்சியை நேற்றைய தினம் மாலை 5மணிக்கு RK மாநாட்டில் நடத்தியிருந்தார்கள். 


இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், ஜீவா, ராஜ்கிரண், ராதிகா, தேவையானி, ரோஜா, சினேகா, சங்கவி உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டிருந்தனர்.


அதுமட்டுமல்லாது கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்யராஜ், போனி கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement