• Jul 26 2025

சும்மா தெறிக்கவுடுறாங்களே..! ‘பாக்கியலட்சுமி' சீரியல் ராதிகாவின் புதிய அவதாரம் ..! வியப்பில் ரசிகர்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சிபு சூர்யனுடன் ரோஜா சீரியலில் இணைந்து நடித்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. அர்ஜூனாக சிபு சூர்யனும், ரோஜாவாக பிரியங்கா நல்காரியும் நடித்த ரோஜா சீரியலில், “அர்ஜூன் சார்” என அழைக்கும் விஷயம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஒரு வார்த்தை.

இந்நிலையில் இவர் ஜீ தமிழில் சீதா ராமன் எனும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த சீரியல் கதைப்படி அக்காவுக்கு திருமணம் நடக்கவிருந்த நிலையில், தங்கையும் நாயகியுமான பெண்ணுக்கு திருமணம் எப்படியோ நடந்துவிடுகிறது. ஆனால் நாயகி அழகில்லை என்பதை காரணம் காட்டி நாயகன் வீட்டில் ஏற்க மறுக்கிறார்கள்.

அந்தவகையில் அழகு என்பது மனதில் இருக்கிறது என்பதை நாயகி நிரூபித்து கணவரின் குடும்பத்தினருடன் இணைவாரா? என்பதை நோக்கி இந்த சீரியல் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

மிக விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிகிறது. இதில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் வலிமையாக நடித்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. ஆம் , வெளியான ப்ரோமோவிலேயே தனது அழுத்தமான மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் கேரக்டரில் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை 2 வதாக திருமணம் செய்துகொண்டு வாழும் அவரது காதல் மனைவியாக வரும் ராதிகா, சீதா ராமன் சீரியலில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.அத்துடன் ரசிகர்கள்  மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனலாம்.


Advertisement

Advertisement