• Jul 25 2025

பிராங்க் பண்ணி Sorry கேட்ட சன்னி லியோன் .. மிரண்டு போன பிரபல ஸ்டைலிஸ்ட்.!. வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளவர் நடிகை சன்னி லியோன்.

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல், சில திரைப்படங்களில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியும் வருகிறார்.

இந்நிலையில் டேனியல் வெபர் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், வாடகைத் தாய் மூலம்,  இரட்டைக் குழந்தைகளையும் பெற்று அருமையாக வளர்த்து வருகிறார்.

இவருக்கு  கிடைத்த புகழ் காரணமாக, எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கு, இந்தியாவின் எந்த மாநிலத்தில்  சென்றாலும், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதும்.

சமீபத்தில் சன்னி லியோன் நடிப்பில் கடந்த  டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ஓ மை கோஸ்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சன்னி லியோன், தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஹிதேந்திர கபோபரை பயப்பட வைத்து சமாதானம் செய்து, சன்னி லியோன் சாரி சொல்லும் காட்சிகள் அடங்கிய தொகுப்பாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

சன்னி லியோனும் தமது ட்வீட்டில், "Sorry" என சிரிப்பு எமோஜிக்கலுடன் ட்வீட் செய்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement