• Jul 25 2025

இதை மட்டும் செய்யவே செய்யாதீர்கள்... தம்பதி மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுத்த 'கபாலி' பட நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 'கபாலி' என்ற படத்தில் ரஜினிகாந்த்திற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. மேலும் இவர் 'ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது தமிழைத் தாண்டியும் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகின்றார்.


இந்நிலையில் இவர் தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேட்டி ஒன்றினை அளித்திருக்கின்றார். அதாவது ''நானும் எனது கணவர் பெனடிக்ட்டும் அவரவர்களுக்கு பிடித்த மாதிரி இருந்து கொண்டே தான் எங்களுக்கான உலகத்தில் சுதந்திரமாக அற்புதமான வாழ்க்கையை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 


அத்தோடு இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கணவன் மனைவி அல்லது காதலன் காதலி இருவர் இடையே ஏதாவது சிறிய சண்டை சச்சரவு ஏற்பட்டால் மூன்றாம் மனிதரின் ஆலோசனையை எக்காரணத்தைக் கொண்டும் பெறக்கூடாது. அது உங்களின் காதல் மற்றும் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் ஆபத்தானது. 

ஏனெனில் நம் வாழ்க்கையில் மூன்றாம் மனிதர் ஒருவரை நாம் எப்போது வரவேற்கிறோமோ அப்போதே நம்முடைய உறவில் விரிசல் ஆரம்பமாகிவிட்டது என சொல்லலாம். நமது கணவர் அல்லது காதலரை நம்மை விட யாராலும் நன்றாக புரிந்து இருக்க முடியாது. 


அவ்வாறு இருக்கும்போது நமது வாழ்க்கையில் நமது பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதில் மூன்றாம் மனிதரின் பிரவேசம் நடக்கும்போது நிச்சயம் அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும்'' எனத் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறாக இவர் தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகளுக்கு கூறிய ஆலோசனைகள் தற்போது சமூக வலைத்தங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement