• Jul 24 2025

என் மகனுக்கு முதலில் நான் நடிச்ச “துப்பாக்கி” படம் தான் காமிப்பேன் – காஜல் அகர்வால் ஓபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது நீண்டகால நண்பரான கௌதம் கிட்ச்லுவை 2020 -ல் திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த ஜோடிக்கு 2022-ல் ஆண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் தங்கள் மகனுக்கு நீல் கிட்ச்லு என்று பெயரிட்டுள்ளனர். 

அடிக்கடி, தனது மகனின் படங்கள் மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், நடிகை நடிப்பு பற்றியும், தனது மகன் எட்டு வயது வரை படங்களைப் பார்ப்பதையோ அல்லது மொபைல் போன் பயன்படுத்துவதையோ விட மாட்டேன் என்று பேசினார். ஆனால், தனது மகன் நீலுக்கு 8 வயது ஆனவுடன், திரைப்படங்களைப் பார்க்க அனுமதிப்பேன் என்றும், தன் மகனுக்குக் காண்பிக்கும் முதல் படம் ‘துப்பாக்கி’ திரைப்படம் தான் என்று கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிக்கும் அதிக வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால், விஜய் உடன்  நடித்த துப்பாக்கி படம் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement