• Jul 25 2025

திரையுலகில் அடுத்தடுத்து சோகம்… பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் திடீர் மரணம்! பிரபலங்கள் இரங்கல்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஒளி பதிவாளராக இருந்த பிரவீன் அனுமோல் மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

இவர் தர்ஷனுடு என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு பாஜிராவ் மஸ்தானி, தூம் 3, பேபி, பஞ்சா மற்றும் யமடோங்கா போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

மேலும் ஒளி பதிவாளர் பிரவீனுக்கு வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

ஒளிப்பதிவாளர் பிரவினின் மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement