• Jul 26 2025

அந்தப் பெண்ணை இப்படியா டேமேஜ் பண்ணுவீங்க... தனா விஷயத்தில்.. நெட்டிசன்களிடம் மாட்டிக்கிட்ட கமல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இன் உடைய இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில் ரூல்ஸ்சை மீறினால் நான் நல்லவானா இருக்க மாட்டேன் என்று போட்டியாளர்களை கடுமையான தொனியில் ஒரு மிரட்டு மிரட்டி உள்ளார் கமல். 


அது மட்டும் இல்லாமல் அடாவடி ரௌடித்தனம், சண்டை, வாக்குவாதம் செய்து தனலட்சுமி டீம் பெற்ற வெற்றியை பறித்து யாருமே எதிர்பார்க்காத வகையில் விக்ரமனுக்கு கொடுத்துள்ளார்.

இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அடடா ஆண்டவர் தரமான செயலை செய்துவிட்டார் என்று கமலை பலவாறாகப் புகழ்ந்து பேசி வருகின்றனர். இருப்பினும் தனலட்சுமிக்கு ஆதரவான ஒரு சிலரோ கமலை கிண்டல் செய்தும் வருகின்றனர்.

அந்தவகையில் ரசிகர்கள் ஒவ்வொருவரும் இது பற்றிக் கூறிய கருத்துக்களை பாப்போம். அதாவது "போடு.. போடு.. தகிட.. தகிட விக்ரமன் தான் வின்னர், ஆண்டவரே செமயா, தரமா செய்றீங்க இந்த சீசன்ல, விஜய் டிவியிடம் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல, மாஸான ப்ரோமோ, கிடைச்ச வெற்றியை பறித்து நியாயமான வகையில் கொடுத்தது செம" என ஒரு நெட்டிசன்ஸ் புகழ்ந்துள்ளார்.


அதுமட்டுமல்லாது இன்னொருவர் "விக்ரமனுக்கு சரிக்கு சமமா விளையாடுற அமுதவாணனையும் தனாவையும் விமர்சிக்கிறேன் என்கிற பேரில், அடிச்சு படுக்க வச்சுட்டாரு கமல். இனி அடுத்த வாரம் விக்ரமன் டீம் மிக்சர் கும்பலோட உட்காந்து தாயம் விளையாடுறதை நாம 24 மணி நேரமும் பாக்கலாம். நினைச்சாலே மெய் சிலிர்க்குது" என தனலட்சுமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.


மற்றொரு இணையவாசி குறிப்பிடுகையில் "இப்படி அந்த பெண்ணை டேமேஜ் பண்றதுக்கு அந்த பொண்ணை எவிக்ட் பண்ணி அனுப்பி விடுங்க...விக்ரமன் நேர்மையானவராக காமிக்க, அடுத்தவங்களை நேர்மை இல்லனு சொல்ல வேண்டுமா? அதுக்கு பிபி எடுத்த முடிவு விக்ரமன் தான் வின்னரனு சொல்லி இருக்கலாம். இதில் கமலை டேமேஜ் பண்றாங்க" என பதிவிட்டுள்ளார்.


மேலும் ஒரு நபர் "வேறலெவல் ஆண்டவரே,விக்ரமனின் உண்மையான விளையாட்டுக்கு சூப்பர் நியாயம், இன்றைய ப்ரோமோ லேட்டா வந்தாலும் பிக் பாஸ் சீசன் 6ன் சூப்பர் ப்ரோமோ என பதிவிட்டு, காமெடியான ஒரு மீம்சையும்" பகிர்ந்துள்ளார்.


இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வீடியோவை வைத்து ஒரு சிலர் கமலுக்கு எதிரான கருத்துக்களையும், வேறு சிலர் எதிர்மறையான கருத்துக்களையும் கூறி உள்ளனர்.

Advertisement

Advertisement