• Jul 25 2025

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவரா... அதுவும் ஒரு மாதத்துக்கு மட்டும் எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் தன்னுடைய அழகினாலும், சிறந்த நடிப்பினாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது ரசிகர்கள் இவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்து வருகின்றனர்.


இந்நிலையில் இவரின் கைவசம் தற்போது கனெக்ட், ஜவான், இறைவன் ஆகிய படங்கள் உள்ளன. மேலும் Trident Arts தயாரிப்பில் அன்னபூரணி என்ற படமும் உருவாகி வருகின்றது. ஆனால் தற்போது அன்னபூரணி தலைப்பை வேறொரு படத்தில் வைக்கப்பட்டுள்ளதால் நயன்தாரா படத்தின் தலைப்பு மாறும் என சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 


இப்படத்தில் நடிப்பதற்காக மட்டும் 35 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் நயன்தாரா. அதுமட்டுமல்லாது எத்தனை கோடி சம்பளம் என்றும் கேட்டு விட்டுத்தான் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.


அந்தவகையில் 35 நாட்கள் கால்ஷீட்டிற்கு ரூ. 10 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளாராம் நம்ம நயன்தாரா.

Advertisement

Advertisement