• Jul 25 2025

கமல்ஹாசன் காலில் விழுந்த பிரபல இளம் இயக்குநர்- அவரே போட்ட எமோஷன் பதிவு- புது படத்திற்கான சந்திப்பா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், பாடகர் என பல்துறை வித்தகராக இருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் நடிப்பில் அண்மையில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவே அமைந்து இருந்தது.

இதனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை மலையாள திரையுலகில் பிரபல இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன் சந்தித்துள்ளார்.இது குறித்து அல்போன்ஸ் புத்திரன் மகிழ்ச்சியான பதிவு ஒன்றினை இட்டுள்ளார்.


அதில்,"சினிமாவின் எவரெஸ்ட் சிகரமான உலகநாயகன் கமல்ஹாசனை என் வாழ்க்கையில் முதல்முறையாக சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன். கிட்டத்தட்ட 5 முதல் 6 சிறிய சினிமாக் காட்சிகளை அவர் சொல்லி கேட்டேன்...எனது எழுதும் புத்தகத்தில் 10 நிமிட இடைவெளியில் சிறு குறிப்புகளை எடுத்துக்கொண்டேன்.

ஒரு மாஸ்டராக அவரைப் பொறுத்தவரையில் அவர் பகிர்ந்துகொண்டவை சிறிய அனுபவங்கள் தான்... ஆனால் ஒரு மாணவனாக அவர் சொன்ன உள்ளடக்கத்தை நான் தவறவிட்டுவிடுவேனோ என்று பயந்தேன். இதற்கு யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த நம்பமுடியாத & சர்ரியல் மற்றும் அழகான அனுபவத்திற்காக RKFI இன் திரு.மகேந்திரன் & திரு. டிஸ்னிக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், கமல்ஹாசனுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அல்போன்ஸ் புத்திரன் அதனுடன் பகிர்ந்திருக்கிறார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.அத்தோடு அல்போன்ஸ் புத்திரன் தான் மலையாளத்தில் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement