• Jul 24 2025

ADK-வுக்கு நீண்ட நாளாக இருக்கும் உடல் சிக்கல்- அமுதவாணன் கொடுத்த புது அட்வைஸ்ட்- அதிர்ச்சியடைந்த விக்ரமன் மற்றும் கதிரவன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார்.


இந்த நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெற்றது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வீட்டுக்குள் விக்ரமன், அமுதவாணன், ADK, கதிரவன் மற்றும் அசீம் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

 அப்போது ADK தனக்கு உள்ள கிட்னி ஸ்டோன் சிக்கல் குறித்து பேசுகிறார். அப்போது அமுதவாணன்,"ஸ்டோனுக்கு நான் ஒரு வழி சொல்றேன். ஆந்திரா பக்கம் கால் கட்டை விரலால அழுத்தியே கல்லை சரி பண்ணிடுவாங்க" என்கிறார். அப்போது விக்ரமன்,"அதெல்லாம் பண்ணக்கூடாதுங்க" என்கிறார்.


இதை கேட்டுக்கொண்டிருக்கும் அசீம்,"ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆந்திரால நெறய பேருக்கு இப்படி பண்ணி சரி ஆகிருக்கு. ஆனால் நான் போனது இல்ல" என்கிறார். இதனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கும் கதிரவன்,"கிட்னி ஸ்டோனை விரலால எடுப்பாங்களா?" எனக் கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் அமுதவாணன்,"இப்போ கையில துவைக்கிறதுக்கும் வாஷிங் மிஷின்ல போடுறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல" எனக் கூற "ஏங்க அவரும் வாஷிங் மிஷினும் ஒண்ணா?. அதுக்கு எல்லாம் மாடர்ன் மெடிசின் இருக்கு" என்கிறார் விக்ரமன்.

தொடர்ந்து, "ஒரு எக்சாம்பிள்காக சொன்னேங்க. ஆனா நெறய பேருக்கு இப்படி செஞ்சு சரி பண்ணிருக்காங்க" என்கிறார் அமுதவாணன். அதனை விக்ரமன் சிரித்தபடியே மறுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement