• Jul 25 2025

KH 234 ஷூட்டிங் அப்டேட் கொடுத்த கமல் ... மணிரத்னம் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியும?!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் தற்போது ஷங்கரின் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார்.

இந்தியன் 2 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள KH 234 படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலின் KH 234 ஷூட்டிங் அப்டேட்:கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. முதன்முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பெரிய மல்டி ஸ்டார் படத்தில் நடித்திருந்தார் கமல். விக்ரம் திரைப்படம் கொடுத்த நம்பிக்கையால், கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கினார் கமல்.

இந்தியன் 2 ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே, தனது அடுத்த படம் குறித்தும் அதிரடியாக அறிவித்தார். கடந்தாண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி வெளியான அறிவிப்பின் படி, இயக்குநர் மணிரத்னம் உடன் மீண்டும் இணைகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இது கமலின் 234வது படமாக உருவாகிறது.

KH 234 என்ற டைட்டிலில் கமல் - மணிரத்னம் உடன் ஏஆர் ரஹ்மானும் இணைவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், தமிழ்த் திரையுலகில் ஒரு மைல்ஸ்டோனாக கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணி இணையவே இல்லை. இந்த சூழலில் யாருமே எதிர்பாராத நேரத்தில் KH 234 அப்டேட் வெளியாகி ரசிகர்களை திணறடித்தது.

அதன்படி, கமல் - மணிரத்னம் இணையும் KH 234 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும், KH 234 படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகளையும் மணிரத்னம் முடித்துவிட்டாராம். ஒருபக்கம் பொன்னியின் செல்வன் 2 போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு நடுவே KH 234 ஸ்க்ரிப்ட் ஒர்க்கும் பைனல் செய்துவிட்டாராம்.

இதனால், ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் போகலாம் என கமல் சொன்னதும், கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டிவிட்டாராம் மணிரத்னம். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement