• Jul 23 2025

இந்தியன் 2 படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போன கமல்ஹாசன்- ஷங்கருக்கு கொடுத்த ஹாஸ்லி கிப்ட்- வாவ்... சூப்பராக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியன் 2 பாகத்திற்கான படப்பிடிப்பு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்த நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இதனால் இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கியது. இதனால் ஷங்கர் படப்பிடிப்பை அண்மைக்காலமாக நடத்தி வந்தார்.

சென்னையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் ஒட்டுமொத்த படத்தின் படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், இன்று இந்தியன் 2 படம் குறித்து... கமல்ஹாசன் பதிவு ஒன்றை போட்டு, இயக்குநர் ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் பரிசு ஒன்றையும் வழங்கியுளளார்.


இதுபற்றி கமல்ஹாசன் போட்டுள்ள பதிவில், ‘இந்தியன் 2’ படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன் என பதிவிட்டுள்ளார்.


மேலும் மிகவும் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் ஷங்கருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.இந்தியன் 2 படத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள நிலையில், விவேக், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, மனோபாலா, டெல்லி கணேஷ், உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 


Advertisement

Advertisement