• Jul 24 2025

லவ் யூ தலைவா.. காரில் நின்றபடி ரசிகர்களுக்கு கையாட்டிய ரஜினி...தீயாய் பரவி வரும் வீடியோ..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது அண்ணாத்த படம். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நடிகர்களை இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முதல் முறையாக ரஜினியுடன் தமன்னா இணைந்துள்ளார்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவரின் காட்சிகள் முன்னதாக மும்பை, புதுச்சேரியில் நடைபெற்ற நிலையில் தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது திருவண்ணாமலையில் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளியில் வந்த ரஜினியின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர்.

அவர்களை எல்லாம் காரின் மேற்கூரை வழியாக கையாட்டி உற்சாகப்படுத்தினார் ரஜினிகாந்த். இந்த வீடியோவில் லவ் யூ தலைவா என்று ரசிகர்கள் கத்தி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்திய இருந்தனர்.இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement