• Jul 25 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஏடிகேவிற்கு கமல்ஹாசன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்- மனம் உருகிய பார்வையாளர்கள்!!

stella / 2 years ago

Advertisement

Listen News!

இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில், கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.இதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர்.

இதற்கு மத்தியில் சில டாஸ்க்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஏடிகே வெளியேறியிருந்தார்.அவரது ரசிகர்களை சற்று வேதனை அடைய வைத்திருந்தது.


இந்த நிலையில், வெளியே வந்த ADKவிற்கு கமல்ஹாசன் கொடுத்த கிஃப்ட் தொடர்பான விஷயம் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ADK, வெளியே வந்த பின்னர், கமல்ஹாசன் முன்னிலையில் RAP பாடல் ஒன்றை பாடி இருந்தார். அந்த சமயத்தில், KH என்ற எழுத்து இருக்கும் தொப்பி ஒன்றையும் ADK விற்கு அளித்திருந்தார் கமல்ஹாசன்.

Sacrifice டாஸ்க்கில் ஏடிகே முடி முன்பு கொஞ்சம் மீதம் வைத்து மற்றவை வெட்டப்பட்டிருந்த நிலையில், அந்த தலையுடன் அவரை வெளியே அனுப்ப மனமில்லை என்றும் கூறி தனது தொப்பியை கமல்ஹாசன் அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement