• Jul 26 2025

சங்கீதா-கிரிஷ் தம்பதியினருக்கு இப்படி ஒரு அழகான மகளா..! புகைப்படத்தைப் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகப் பல ஆண்டு காலமாகத் திகழ்ந்து வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து அசத்தியிருக்கின்றார்.


அந்தவகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த 'வாரிசு' திரைப்படத்தில் கூட யாருமே எதிர்பாராத வகையில் விஜய்யின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றார்.

இவ்வாறாக பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற நடிகை சங்கீதா கடந்த 2009-ஆம் ஆண்டு பின்னணி பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஷிவியா எனும் அழகிய மகள் ஒருவர் உள்ளார்.


இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு தன்னுடைய மனைவி சங்கீதா மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை பாடகர் கிரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் "சங்கீதாவின் மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே, இந்தளவிற்கு அழகாக இருக்காரே" எனக் கூறித் தமது கமெண்டுகளின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர். 

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement