• Jul 26 2025

எல்லார் முன்னும் ஷெரினாவை அந்த விஷயத்துக்காக ‘ஸாரி’ கேட்க வைத்த கமல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி ஜி.முத்து சாந்த அசல் கோலார் என மூவரும் வெளியேறி 18போட்டியாளர்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடிலேயே ஷெரினாவுக்கு ஒரு விஷயத்தில் கமல் நறுக்கென குட்டு வைத்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.உடனடியாக தனது தவறை நினைத்து வருந்திய ஷெரினா 'ஸாரி'யும் கேட்டு விட்டார்.


 அதாவது  மைனா மற்றும் மணிகண்டன் குக்கூ படத்தின் கான்செப்ட்டை எடுத்து பண்ண ஸ்கிட் ரொம்பவே பிடித்து இருக்கிறது என்றும், அதைவிட விக்ரமன், ரச்சிதா மற்றும் அமுதவாணன் மூவரும் இணைந்து போட்ட அந்த மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் நிலை மாற வேண்டுமென்கிற டிராமா சூப்பர் என வெகுவாக பாராட்டி விக்ரமனை இந்த வாரம் முதல் நபராக சேவ் செய்து விட்டார்.

மைனாவும் மணிகண்டனும் போட்ட அந்த visually challenged டிராமா சிறப்பாக இருந்தததை பாராட்டிய ஷெரினா மைனாவுக்கு பதிலாக மணிகண்டனுக்கு பச்சை நிற டிஆர்பியை பரிசாக கொடுத்தார். ஆனால், அவர் அப்போது Blind ஆக நடிச்சி அசத்துனாங்க என்கிற வார்த்தையை பயன்படுத்தியதுமே கமல் குறுக்கிட்டார்.



எல்லாம் சரி ஷெரினா ஆனால், அவர்களை பிளைண்ட்னு சொல்லாதீங்க விஷுவலி சேலஞ்ச்ட் நபர்கள் என கூறுங்கள்  என கமல்ஹாசன் சொன்னதை கேட்டதுமே தனது பெரிய தவறை உணர்ந்து கொண்டார் ஷெரினா. உடனடியாக அதற்கு மன்னிப்பும் கேட்டார்.

ஸாரி நான் அப்படி சொன்னதுக்கு என்ன மன்னிச்சிடுங்க என கமல்ஹாசனிடம் மக்களிடமும் ஷெரினா  திடீரென மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அடுத்த பலியாடு நீதான்மா அது தெரியாமல் இப்படி பேசிட்டு இருக்க என பிக் பாஸ் ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில்  பை பை ஷெரினா என ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகின்றனர்.



எனினும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பேண்டேஜ் பேபி ஷெரினா தான் வெளியேறி உள்ளார் என்கிற தகவல்கள் லீக் ஆகி உள்ள நிலையில், நாளை ஆயிஷா அடையப் போகும் மனநிம்மதியை காணத்தான் ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் பண்ணி வருகின்றனர். சனிக்கிழமை எபிசோடு முழுக்கவே அழுத மூஞ்சியாகவே இருந்த ஆயிஷா ஷெரினா அவுட் என்பதை தெரிந்ததும் அடுத்த வாரம் அசீம் ஆவியை தனது கூடுக்குள் ஏற்றிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Advertisement

Advertisement