• Jul 26 2025

அசீமிற்கு கிடைத்த பாராட்டு-தனத்தை வறுத்தெடுத்த கமல்-நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. அந்த வகையில் 27ம் நாள் என்ன நடந்தது என்று பார்ப்போம்.அதாவது நேற்று கமலின் எபிசோட் இப்படியா போனது என்பதை பார்ப்போம் வாங்க...

ராம் விக்ரமன் இரண்டு பேரும் ஜெயிலுக்குள் இருந்தார்கள்.அத்தோடு ஒவ்வொரு முறையும் தன்னையே ஜெயிலுக்கு அனுப்பிறாங்க என்று எண்ணி கடுப்பில் இருந்தார்.இந்த நேரம் பார்த்து அமுதவாணன் தொடர்ந்து பேச்சு கொடுக்க ராம் சொன்னார் நீ பேசவேண்டும் என்றால் உள்ளே வந்து பேசு எனக் கூற.உடனே அமுதவானண் பிக்பாஸிடம் சென்று எனது தம்பியை பார்க்கணும் உள்ளே விடுங்க என்று சொன்னதும் பிக்பாசும் காமெடியாக இவரை உள்ளே விட்டு ராம் மற்றும் விக்ரமனை வெளியில் அனுப்பி வைத்துவிடுவார்.

அதற்கு பிறகு கமலும் வந்தார்.அதாவது அசீம் பற்றி நேற்று கமல் நல்லவிதமாக கூறி இருந்தார்.அத்தோடு அவரைப் பற்றி நல்ல விதமாக கூற நிறைய நேரம் எடுத்திருந்தார்.அதன் பிறகு தனலட்சுமியை பற்றி கமல் நல்லாக வச்சு செய்தார்.இந்த வாரம் தனலட்சுமிக்கு ஒண்ணுமே தெரியாது போய் கம்முனு படு என அசீம் பேசியதும், அசீமை சள்ளை என தனா திட்டியதை நோட் பண்ணி நொங்கெடுத்து விட்டார் கமல்ஹாசன்.

அதாவது தனலட்சுமியின் ஆவி அசீம் உடம்பிலும், அசீமின் ஆவி தனலட்சுமி உடம்பிலும் கூடு விட்டு கூடு பாய்ந்து விட்டதா? என கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், இந்த வாரம் அசீம் அமைதியாக இருந்ததை வெகுவாக பாராட்டினார்.

அதே நேரத்தில் தனலட்சுமி சொன்ன 'சள்ளை' தான் அசீம் என கமல் கொடுத்த விளக்கம் வேறலெவலில் இருந்தது.அத்தோடு கடந்த வாரத்தில் எல்லாம் ரசிகர்கள் அசீமுக்கு கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டும், தனலட்சுமியுடன் அவர் எப்படி அப்படி சண்டை போடலாம் என சொன்ன ரசிகர்களே இந்த வாரம் தனலட்சுமி மீது தான் தப்பு, அசீம் ரொம்ப அமைதியாகி விட்டார் என பேசும் அளவுக்கு அசீமின் டிரான்ஸ்ஃபர்மேஷன் உள்ளது.

கடந்த வாரம் அசீம் உங்களுக்கு நான் அட்வைஸ் எல்லாம் சொல்லவில்லை, கண்டிக்கிறேன் என கொதித்தெழுந்த கமல், இந்த வாரம் அசீமின் மனமாற்றத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டு பாராட்டினார்.அத்தோடு  தனலட்சுமியின் ஆவி அசீம் உடம்பிலும், அசீமின் ஆவி தனலட்சுமி உடம்பிலும் இந்த வாரம் போய் விட்டது போல எனக்கு தோன்றியது என கமல் இருவரையுமே வஞ்சப்புகழ்ச்சி அணியில் வச்சு செய்து விட்டார். மேலும், தனலட்சுமியின் கோபத்தை கட்டுப்படுத்தவும் தனலட்சுமி பேசுவது போலவே பேசி தாளித்துக் கொட்டினார்.

அசீமுக்கும் தனாவுக்கும் இடையேயான சண்டையில் சள்ளைன்னு அசீமை தனா திட்டி இருந்தார். சள்ளைன்னா என்னன்னு தெரியுமா? என கமல் தனாவை கேட்டதும், திரும்ப திரும்ப தொல்லை கொடுக்கிறது சார்ன்னு சொல்லியிருந்தாங்க.. ஆமாம், அசீம் ஒரு சள்ளை தான் என கமல்ஹாசனும் அதிரடியாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தூண்டில் முள்ளில் உள்ள புழுவையே சாப்பிட்டு, தூண்டிலில் சிக்காமல் செல்லும் சிறிய வகை மீனுக்கு சள்ளை என்று பெயர் உள்ளது. சள்ளை மீன் வந்து விட்டால், அன்னைக்கு மீனவர்களுக்கு மீன் சிக்காது. அதைத்தான் வட்டார வழக்காக சொல்ல ஆரம்பித்தனர். பல பேர் அசீமை இந்த வாரம் வெளியே அனுப்பிட வேண்டுமென்கிற திட்டத்தில் போட்ட தூண்டிலில் எல்லாம் அவர் சிக்காமல் சள்ளையாக தப்பித்துக் கொண்டார் என சூப்பர் விளக்கம் கொடுத்து பாராட்டினார் கமல்.

ஆயிஷா போனவாரம் கமலை எதிர்த்து பேசிய விசயம் சோசியில் மீடியாவில் தீயாயக பரவ இந்த வாரம் லைற்ற ஆயிஷாவை வச்சு செய்தார் கமல்.இந்த வாரம் அவர் கொஞ்சம் டல்லாகவே இருந்தார்.

அத்தோடு பிக்பாஸ் வீட்டிற்குள் பலரும் ரூல்ஸை பாலோ பண்ணுறாங்க இல்லை.அதாவது எபிசோட் இல் ஒரு விசயம் காட்டவில்லை.அது என்ன வென்றால் ஜனனி அமுதவாணனிடம் மைக்கை கலட்டி விட்டு பேசிய விடயம் தான்.

அதன் பிறகு முாலாவதாக விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் சேர்வ் ஆனாங்க.அத்தோடு இந்த வாரம் ஷெரினா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


 

Advertisement

Advertisement