• Jul 23 2025

சந்திரமுகியாக களமிறங்கிய கங்கனா... அடேங்கப்பா ஜோதிகாவிற்குப் பதிலாக நடிப்பதற்கு இத்தனை கோடி சம்பளமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று 'சந்திரமுகி'. இப்படத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு எனப் பலரும் நடித்து அசத்தி இருந்தார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.  மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அத்தோடு இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


அதுமட்டுமல்லாது வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் ஜோதிகாவிற்குப் பதில் சந்திரமுகியாக நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கமிட்டாகியுள்ளார்.


இதனை படக்குழுவினரே சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இப்படத்தில் சந்திரமுகியாக நடிக்க ரூ. 9 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement