• Jul 25 2025

யானையுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட கண்ணை நம்பாதே திரைப்பட நடிகை- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி, கதாநாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.இவர் நடித்த இந்த திரைப்படம் முதலுக்கு மோசம் இல்லாத அளவிற்கு வசூலை ஈட்டிய போதிலும், தற்போது வரை கோலிவுட் திரை உலகில், நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வரும் நடிகையாகவே உள்ளார்.


ஆத்மிகா தன்னுடைய முதல் படத்திற்கு பின்னர், மூன்று ஆண்டுகள் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில்... 2021 ஆம் ஆண்டு 'கோடியில் ஒருவன்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.


'கோடியில் ஒருவன்' திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், அடுத்ததாக இவர் நடித்து வெளியான 'காட்டேரி'  'கண்ணை நம்பாதே'ஆகிய திரைப்படங்களுக்கும்  எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்பொழுது இவரது கைவசம் 'நரகாசுரன்' படமே உள்ளது.


சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில், போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு யானையுடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement