• Jul 26 2025

ஆரம்பமாகியது பார்த்திபன் காவியா திருமணக் கொண்டாட்டம்- தடுத்து நிறுத்துவாரா தேவி?- ஈரமான ரோஜாவே சீரியல் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜவே சீசன் 2. இந்த சீரியலில் தேவி பற்றிய உண்மைகள் அனைவருக்கும் தெரிய வந்ததோடு பார்த்திபன் ரம்யா திருமணமும் நின்று விட்டது. 

அதனால் பார்த்திபனுக்கும் காவியாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் காவியாவுக்கு மெஹந்தி போட எல்லோரும் இருக்கும் போது ஜீவா வந்து மெஹந்தி எங்க அண்ணன் தான் காவியாவுக்கு மெஹந்தி போட வேண்டும் என்று சொல்ல பார்த்தியும் மெஹந்தி போட்டு விட வருகின்றார்.


பார்த்தியின் அம்மா பார்த்திபனுக்கு மெஹந்தி போடத் தெரியாது என்று சொல்லவும் காவியா பரவாயில்லை. அத்தை பார்த்திபனே போட்டு விடட்டும் என்று சொல்லல பார்த்திபன் மெஹந்தி போடுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது.

இதனால் இவர்களின் திருமணம் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement