• Jul 25 2025

வீட்டிற்குள் நுழைந்த கண்ணன்... பதற்றத்தில் ஒட்டுமொத்த குடும்பம்... ஏற்றுக்கொள்வாரா மூர்த்தி... விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் நாளுக்கு நாள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கதிர் கண்ணனிடம் "வாங்கின சம்பளத்தில் செலவிற்குப் போக பாதிக் காசை ஆவது சேர்த்து வைக்கலாம் தானே, நீ என்னடா என்றால் வாங்கி வச்சிருக்காய், பேசாமல் 2பெரும் கிளம்பி என் கூட வந்துடுங்க" எனக் கூறி கண்ணனையும், மனைவியையும் அழைத்துச் செல்கின்றார். 

பின்பு வீட்டிற்கு சென்றதும் தனத்திடம் "இவர்களை எல்லாம் நம்ம வீட்டிற்கு கூட்டி வந்திட்டேன்" என சொல்கின்றார். அதற்கு முல்லை "இதெல்லாம் மாமாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும்" எனக் கூறி பயப்பிடுகின்றார். 


மறுபுறம் மூர்த்தியும் வீட்டிற்குள் நுழைகின்றார். அந்த சமயத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் பதற்றத்தில் உள்ளனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement