• Jul 25 2025

நடுரோட்டில் வைத்து ஆதிரை கழுத்தில் தாலி கட்டிய கரிகாலன்... கதறி அழும் ஜனனி... வேடிக்கை பார்க்கும் ஊர் மக்கள்... பரபரப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் அதிரை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கதிரும் குணசேகரனும் ஆதிரையைக் தர தரவென இழுத்துச் செல்கின்றனர். 


மறுபுறம் விசாலாட்சி ஈஸ்வரியிடம் "நம்மளப்போட்டு அந்தப்பாடு படுத்தினானே அங்க போய் என்ன செய்யப்போறானோ" எனக்கூறி பதறுகின்றார். பதிலுக்கு ஈஸ்வரி "அங்க ஜனனி இருக்கா, அவ எல்லாத்தையும் பார்த்துப்பா" எனக் கூறுகின்றார்.


ஆனால் நினைத்ததிற்கு மாறாக குணசேகரன் கூறியதற்கிணங்க கரிகாலன் நடுரோட்டில் வைத்து ஆதிரை கழுத்தில் தாலி கட்டுகின்றார். இதனைப் பார்த்ததும் ஜனனி நிலத்தில் விழுந்து கதறி அழுகின்றார்.  இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement