• Jul 25 2025

கண்ணீருடன் ஆதிரை... வித்தியாசமாக நடக்கவுள்ள கரிகாலன் திருமணம்... குணசேகரனிடம் சிக்கிய ஜனனி..? பரபரப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் சமீபகாலமாக ரசிகர்கள் பலரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வினா என்னவெனில் ஆதிரை கல்யாணம் இறுதியில் யாருடன் நடக்கும் என்பது தான். 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் குணசேகரன், கதிர், கரிகாலன் ஆகியோர் ஆதிரை இருக்கும் இடத்திற்கு தேடி செல்கின்றனர். 


மறுபுறம் ஜனனி "அருண் எங்க..? மலையில் இருந்து இறங்கினால் ஏன் இன்னும் வரல" எனக்கேட்டு பயங்கர டென்ஷனில் உள்ளார். 


அதுமட்டுமல்லாது குணசேகரன் கரிகாலனிடம் "உனக்கும் ஆதிரைக்கும் நடக்கப்போறது ரொம்ப வித்தியாசமான கல்யாணம்பா" எனக் கூறுகின்றார். 

மேலும் ஆதிரை "அவங்க எல்லாம் இங்க வந்தால் என்ன நடக்கும் என்றே தெரியல" என்று கண்ணீருடன் பதற்றத்தில் கூறுகின்றார். அதற்கு சக்தி "முதலில் நாம் இங்க இருந்து போய்டலாம் வாங்க" என்கிறார். 


அந்த சமயத்தில் குணசேகரன் தனது  காரில் இருந்து கீழே வருகின்றார். அப்போது ஜனனி, ரேணுகா உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர். இவர்கள் குணசேகரனிடம் சிக்கி விட்டார்களா..? இல்லையா என்பதை எபிசோட்டின் மூலமாக தெளிவு படுத்திக் கொள்வோம்.


Advertisement

Advertisement