• Jul 24 2025

ஹாப்பி பர்த்டே அண்ணா... விஜய்யின் பிறந்தநாளுக்கு ரீல் தங்கை சரண்யா மோகன் வாழ்த்து..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன். அதனைத் தொடர்ந்து பின்னர் 'யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடிக் குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம்' உட்படப் பல படங்களிலும் நடித்துள்ளார். 


தமிழில் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்திருக்கின்றார். அதிலும் குறிப்பாக வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அதில் இவர் தனது ரீல் அண்ணன் ஆகிய விஜய்யுடன் இணைந்து செய்த அட்டகாசங்களுக்கு அளவேயில்லை. அந்த இன்றும் நம்மால் மறக்க முடியாது. இந்நிலையில் விஜய் இன்றைய தினம் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். 

இதற்கு சரண்யா மோகனும் ஹாப்பி பர்த்டே அண்ணா எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement