• Jul 25 2025

தான் போட்ட பிளானில் வசமாக சிக்கிய கார்த்தி....அனுவின் நண்பரோடு இணைந்து மாஸ் காட்டும் சுந்தரி...விறுவிறுப்புடன் சுந்தரி சீரியல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

 கார்த்திக் அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.



இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வெளியாகிஉள்ளது.கார்த்திக் சுந்தரியின் பேர்ஸை அடித்து விட ஆளை அனுப்புகின்றார்.அதே போல அந்த பேஷை அந்த நபரும் களவாடிவிட்டு கார்த்திக்கிற்கு போன் செய்து சொல்கின்றார்.



இதனால் கார்த்திக்கும் தனது பிளான் சரியாகிடும் என எண்ணி சந்தோஷப்படுகின்றார்.இந்த நேரம் அனுவின் பிரண்டான டாக்டர் குழம்பித் தவிக்கின்றார்.இதை எப்பிடி ப்ரூப் பண்ணிறது என்று சுந்தரியிடம் கேட்கின்றார்.



அதற்கு சுந்தரி சொல்கின்றார்...கார்த்திக் எப்படி இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என உறுதியாக சொல்கின்றார்.அத்தோடு நீங்க வெயிட் பண்ணி பாருங்க என சொல்கின்றார்.

இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement